Saturday, March 17, 2012

சிறு கதை

ராம் ஒரு நல்லப் பொறுப்பான தந்தை, கணவன் மற்றும் நேர்மையான காவல்த்துறை அதிகாரி (Inspector), இவரின் முழுப் பெயர் ராமமோகன். மனைவி காஞ்சனா (ஒரு பெண்கள் இயக்கத்தில் சேர்ந்து சமூக சேவை செய்கிறவர்), மகன் துரைராஜ் (ஏழாம் வகுப்பு படிக்கிறான்), மகள் பார்கவி (B.Sc fashion technology படிக்கிறாள்). ராம் தனது குடும்பத்தையும், ஊரையும் பிரித்துப் பார்க்காத ஒரு அதிகாரி, நல்ல திறமை சாலி, தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர் என சொல்ல முடியாது, மக்களுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவருக்கு இருக்கும் அறிவினால் எதையும் செய்பவர்.

ஒரு நாள், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஊருக்கு முதலமைச்சர் வரபோகிறார், மக்களிடம் ஓட்டு கேட்க என்பதனால் முதல்வரின் பாதுகாப்பு பணியில் மும்முரமாக இருந்தார். அப்பொழுது அவர் அலுவலகத்தில் இருந்து புறப்படும் முன், தொலைப்பேசி சப்தம் கேட்டது, அலுவலகத்தின்னுள் ௭வரும் இல்லை, அதனால் ராம் தொலைப்பேசியை எடுத்து "யார் ?" என்றுக் கேட்டார். அப்பொழுது ஒலித்த அக்குரலின் சப்தம் பதட்டமாகவும், மெல்லிய குரலாக மற்றுமின்றி அதிர்ச்சியாகவும் இருந்தது.

"சார் !!! முதல்வருக்கு ஆபத்து... எனது வீட்டு பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு பெரிய திட்டத்தை செயல்ப்படுத்த போகிறார்கள்.. நான் தர்ச்சயலாக அங்கு சென்ற போது கண்டுபிடித்தேன் !!! அந்தத் திட்ட..", தொலைப்பேசி துண்டிக்கப்பட்டது... இதுப் போல் நேரங்களில் இதைப் போல் அழைப்புகள் வருவது சகஜம்தான்... ஆனால் ராமிற்கு அதை ஊர்சிதபடுத்த, ஒரு constableஐ அழைத்து, "நீங்கள் control roomக்கு call செய்து இப்பொழுது வந்த numberஐ track செய்து அது யார், என்ன என்று விசாரியுங்கள்"... அந்த constableக்கு ஒன்றும் புரியவில்லை, அவர் சிரித்துக் கொண்டே "சார் !! முதலமைச்சர் வராரு சார் !!!", "ஆமா !! இப்போ என்ன அதுக்கு ?" அதிகரக்குரலில் கேட்டார் ராம், "இல்ல சார் !! இப்போ போய் ஏதோ ஒரு numberஅ track பண்ண சொல்றீங்களே !!", கோபமாக ராம் "மைகேல், சொன்னத மட்டும் செய்ங்க !!", "OK Sir" என்று உறக்ககுரலில் சொல்லி அங்கு இருந்து புறப்பட துவங்கினார், ராம் மெல்லிய மற்றும் அதிகாரக் குரலில் "மைகேல், அநேகமா அது ஒரு fake call ஆகத் தான் இருக்கும்னு நினைகிறேன், ஆனா நீங்கபோய் conform பண்ணிடீங்கான நல்லா இருக்கும் !!" என்றதும் மைக்கேலுக்கு புரிந்து விட்டது, யாரோ அழைத்து மிரட்டல் கொடுத்திருகார்கள் என்று, "என்ன மிரட்டலாக இருக்கும் ?, ஒருவேளை முதலமைச்சர் விசயமோ ?" என்று எண்ணிய படி, "சார் !! என்ன கால் சார் அது" என்றதும், "அதான் மைகேல், நீங்க நினச்சதேதான், முதலமைச்சர் உயிருக்கு தான் மிரட்டல்", அவர் இப்படி சொன்னதக்கு காரணம், மைக்கேலும் ராமும் ஒன்றாக மூன்று வருடங்கள் stationல் பணியாற்றுகின்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு...

Tuesday, July 13, 2010

About Me

Hey EveryOne,

Thanks for viewing my blog... My name is Sam. Actually I born in India and grown up in India and living the one and only RED Country India (RED means the blood of our freedom fighters). We are not just founded, we are created. We are not rulers but we are Good Fighters. So Finally I am from the Great India.

I will post some interesting topics and some informations about India as well as my mother tongue Tamil too. Since this is the only language can express your thoughts easily.

So, see you soon with my postings....

Bye now from
Sam.